DSLR ஐ விட Mirrorless சிறந்ததா?

 DSLR கேமிராக்கள் இன்னும் வரும் காலங்களில் குறைய வாய்ப்புள்ளது காரணம் கேமரா உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் DSLR கேமிராக்கள் உற்பத்தி குறைக்க வாய்ப்பு உள்ளது என்று கூறிக்கொண்டு இருக்கிறார்கள்...

இன்று வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் Mirrorless கேமிராக்கள் உற்பத்தியில் அதிக அளவில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது...

இப்போது கூட பல நிறுவனங்கள் பலதரப்பட்ட mirrorless கேமிராக்கள் சந்தையில் புழக்கத்தில் வந்தது கொண்டு இருக்கின்றது...


Mirrorless Camera என்ன சிறப்பு?

முதலில் நம் தெரிந்து கொள்ள வேண்டியது Mirrorless Camera - வில் Real time View - அதாவது நம் கேமிராவில் Sensor - இல் என்ன படம் தெரிகின்றதோ அதை சற்றும் வித்தியாசம் இல்லாமல் உங்கள் View Finder - இல் காட்சி அளிக்கும்...

ஆனால் DSLR கேமிராவில் நீங்கள் படம் எடுத்த பிறகு பார்க்க முடியும் அல்லது Depth of Feel Preview Finder - அழுத்திக்கொண்டு பார்க்க வேண்டும்...

உண்மையில் இது நம் கவனிக்க வேண்டும்... மிகவும் சிறப்பான ஒன்றாகும்...

Auto Focusing Mirrorless Camera :

மிரர்லெஸ் கேமிராவில் ஆட்டோ ஃபோகஸ் இருக்கிறது...

எனவே படத்தின் காட்சிகள் மிக துல்லியமாக அளக்கும் அது மட்டும் இல்லாமல் மிக வேகமாக படங்கள் எடுக்க முடியும்...

காரணம் இதில் உள்ள Auto Focus சென்சார் Image Sensor இல் இருந்து எடுத்து பிரதிபலிக்கிறது...

எனவே இதில் பிழை வருவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு...

இதனால் Face Detection, Eye Detection போன்றவை எல்லாம் மிகவும் துல்லியமாக இருக்கும்...

இது போன்ற தொழில்நுட்பம் மிகவும் சிறப்பு வாய்ந்தது Mirrorless கேமிராக்கள்...

Frames Per Second:

FPS என்பது ஒரு நொடியில் உங்கள் கேமிராக்கள் எத்தனை புகைப்படங்கள் எடுத்து தரும் என்பதை குறிக்கும்...

இந்த Mirrorless கேமிராக்கள் பொதுவாக FPS ஒர் நொடியில் 8 முதல் 18, 24 வரை புகைப்படங்கள் எடுத்து தரும்...

இது ஏன் சாத்தியம் ஆகிறது என்றால் இதில் Mirror இல்லாமல் இருப்பதே காரணம்...

இதனால் நீங்கள் விளையாட்டு,பறவை இனம்,ஆடல் போன்ற வேகமாக நடைபெறும் எந்த ஒரு காட்சிகளிலும் உங்கள் புகைப்படம் சுலபமாக துல்லியமாக வேகமாக எடுக்க முடியும் என்பதில் சந்தேகமில்லை...

Optical Image Stabilization:

Image Stabilization என்பது நம் கேமிராவை ( Slow shutter Speed ) பயன்படுத்தி கையில் வைத்துக் எடுக்கும் போது ( Shakes ) அசைவுகளை குறைப்பதற்கு கொடுக்கப்படுகின்ற ஒர் தொழில்நுட்ப ஆகும்...

எனவே இந்த Mirrorless Camera வில் Image Stabilization ஆனது  8.Stops  வரையில் இருப்பதால் நீங்கள் Tripod பயன்படுத்த முடியாத சூழ்நிலையில் கையில் கேமிரா வைத்து புகைப்படங்கள் எடுக்கும் போது அசைவுகளை கட்டுப்படுத்தி ஒர் நிலையான புகைப்படத்தை தருகிறது...

ஆனால் DSLR  இல்  Image Stabilization 4 - 5.Stops வரை மட்டுமே கொடுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது...

Mirrorless Camera வில் Image Stabilization 8.Stops வரையில் இருப்பதால் புகைப்பட கலைஞர்களுக்கு இது ஒரு வர பிரசாதம் ஆகும்...

 Noise And Vibration:

பொதுவாக DSLR கேமிராவில் Mirror இருப்பதால் நீங்கள் ஒவ்வொரு முறையும் புகைப்படங்கள் எடுக்கும் போது ( shutter Button ) அழுத்தும் போது 'க்ரக்' என்ற சத்தம் வரும்...

காரணம் இதில் உள்ள mirror ஒவ்வொரு முறையும் மேலே சென்று வரும் வகையில் DSLR கேமிராக்கள் உள்ளே நடைபெறும் தொழில்நுட்பமே சத்தத்திற்கு காரணம்...

இதனால் நீங்கள் மிக அமைதியான சூழலில் புகைப்படங்கள் எடுக்கும் போது அசௌகரியத்தை ஏற்படுத்தும்...

இது மட்டும் இல்லாமல் Vibration அதிர்வும் இதில் உள்ளது...

இதனால் நீங்கள் Tripod மூலம் புகைப்படம் எடுக்கும் போது Imgae Stabilization க்கு மாறுபடும் வாய்ப்பு இருப்பதால் உங்கள் புகைப்படம் அசைவுகளுடன் வெளியீட்டை கொடுக்கும்...

ஆனால் Mirrorless கேமிராக்களில் மிரர் இல்லாத காரணத்தால் மேற்கூறிய இடையூறுகளை தவிர்க்க முடியும்...

Light Weight And Comfortable:

Mirrorless Camera வில் Mirror சம்மந்தப்பட்ட இன்னும் சில தொழில்நுட்ப பகுதிகள் இல்லாததால் மிகவும் எடை குறைவானது...

உதாரணமாக DSLR 650.Gmsஎடை இருக்கும் பட்சத்தில் Mirrorless கேமிராக்கள் 350.Gms மட்டுமே வித்தியாசம் இருக்கும்...

முடிவுரை:

மேற்கூறிய அனைத்தும் ஒன்றை விட ஒன்று தாழ்ந்வை என்பது அல்ல... நம் DSLR Camera வைத்தும் நல்ல புகைப்படங்கள் எடுக்க முடியும்...

அதே சமயம் Mirrorless Camera வைத்து மிகவும் குறைந்த தரத்திலான புகைப்படங்கள் எடுப்பதும் முடியும்...

ஆகவே நீங்கள் உங்கள் திறமையில் ஒரு புகைப்படம் எந்த நிலையில் அட்டகாசமாக எடுப்பது என்பது உங்களின் தனி திறமை சார்ந்தது ஆகும்...

இங்கு DSLR மற்றும் Mirrorless இடையே உள்ள வித்தியாசங்கள் மட்டுமே நீங்கள் புரிந்து கொண்டு உங்கள் வசதிக்கேற்ப தேர்வு செய்துகெள்வது சிறப்பு ஆகும்...



கருத்துரையிடுக

Post a Comment (0)

புதியது பழையவை