OLA ஆட்டோ புக் செய்வது எப்படி?

 இன்றைய சூழலில் நம் ஒர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கு பல வாகனங்களை பயன்படுத்தி கொண்டு வருகிறோம்...



அவற்றில் ஒன்று தான் மூன்று சக்கர வாகனமான ஆட்டோ டாக்ஸி ஆகும்...



ஆட்டோ வில் பயணம் செய்வதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி செல்வார்கள்...



ஏனெனில் ஆட்டோவில் பயணம் செய்யும் போது வெளிப்புற காட்சி மற்றும் காற்றோட்டம் மிகவும் நம்மை கவரும் வண்ணம் இருக்கும்...



இது மட்டும் இல்லாமல் ஆட்டோவானது மிகவும் மற்ற வாகனங்கள் விட உருவத்தில் சிறியது எனவே நெருக்கடியான சாலைகளில் மிக குறுகிய கால நேரத்தில் நம் செல்ல வேண்டிய இடத்திற்க்கு விரைவில் சென்றடைய முடியும்...



இதன் காரணமாக பலர் இந்த வாகனத்தில் பயணம் செய்வதை விரும்புவார்கள்...


இந்த வாகனம் ஓளா போன்ற டாக்ஸி நிறுவனங்கள் மூலம் புக்கிங் செய்து கொள்ள முடியும்...


இந்த ஓளா ஆட்டோ புக் செய்வது பற்றி தெளிவாக புரிந்து கொள்ள இந்த கட்டுரையை தொடர்ந்து படிக்கவும்...





ஓளா ஆட்டோ கட்டண விவரம்?


பலரும் ஓளா ஆட்டோ புக் செய்தால் கட்டணம் குறைவு என்று சொல்வதை கேள்விப்பட்டு இருப்பீர்கள்...


அது உண்மை என்று கூறலாம்...


பொதுவாக இந்த மாதிரியான டாக்லி நிறுவனங்கள் அந்த அந்த நாட்டின் அரசினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள கட்டணங்களை கொண்டு இந்த பயணக்கட்டணம் அமையும்...

இப்போது இந்தியாவில் தமிழ்நாட்டில் எம்மாதிரியான கட்டணம் 2023 ஜனவரி மாதம் கணக்கின் படி இருக்கிறது என்பதை பார்க்கலாம்...


ஆட்டோ அடிப்படை கட்டணம் - 25. ரூபாய்


கிலோமீட்டர் ஒன்றுக்கு - 12 ரூபாய்


இரவு நேரத்தில் 50% கூடுதல் 

ஓளா சேவைகள் மற்றும் ஜி.எஸ்.டி வரி உட்பட குறைந்தபட்சம் 15 முதல் 60 வரை இருக்கும்...


இங்கு அடிப்படை கட்டணம் என்பது நீங்கள் 25 ரூபாய் குறைந்தபட்சம் செலுத்த வேண்டும்...



இந்த 25 ரூபாயில் நீங்கள் 1.8 வரை பயணம் செய்யலாம்...



பிறகு வரும் ஒவ்வொரு கிலோ மீட்டர்க்கும் 12 என தொடர்ந்து கணக்கிடப்படும்...

பின்னர் மேற்கூறிய படி ஓளா சேவைகள் மற்றும் ஜி.எஸ்.டி கணக்கிடப்படும்...



ஆனால் இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள் என்னவென்றால்,


ஆட்டோவிற்க்கு காத்திருப்பு கட்டணம் இருக்கிறது...

ஒவ்வொரு 5 நிமிடத்திற்க்கும் 3.50 ரூபாய் இருக்கிறது...


ஆனால் இந்த முறையை இம்மாதிரியான டாக்ஸி நிறுவனங்கள் பின்பற்றுவதில்லை...

அரசு கவனிப்பது இல்லை என்பது இந்த நிறுவனத்துடன் இணைந்து இருக்கும் ஒட்டுநர்களின் கவலை ஆகும்...

இந்த கட்டணம் தமிழ் நாடு அரசு நிர்ணயித்த கண்டன விவரம் ஆகும்...


அது மட்டுமல்லாமல் இந்த கட்டண விவரம் அமைந்த ஆண்டு 2012 அன்றைய நாளில் அரசாங்கம் பிறப்பிக்கப்பட்ட உத்தரவாகும்...


ஆனால் அன்றைய தினத்தில் அரசு நிர்ணயித்த கட்டணம் இன்று 10 ஆண்டுகள் கழித்தும் விலை வாசி உயர்ந்தும், உயர்த்தப்படாமல் இருக்கிறது...


உயர் நீதிமன்றம் வாகன எரிபொருள் விலை அடிப்படை கொண்டு ஆட்டோ மீட்டர் திருத்தம் கொண்டு வர அரசுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில்


 தமிழக அரசு எந்தெந்த ஒரு கவனமும் செலுத்தாமல் இருக்கிறது...


பக்கத்து மாநிலமான கேரளாவில் ஆட்டோ கட்டணம் இரட்டிப்பாக அடிப்படை கட்டணம் 50. ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது....




ஓளா ஆட்டோ புக் செய்வது எப்படி?




இந்த ஓளா ஆட்டோ முன்பதிவு செய்வதற்க்கு உங்கள் தொலைபேசி எண்ணை பயன்படுத்தி செயலியில் கணக்கு செய்து கொள்ளலாம்...




பிறகு நீங்கள் இருக்கும் இடத்தில் ஜி.பி.எஸ் ஆன் செய்து சரியான இடத்தில் இருக்கிறோமா என்பதை உறுதி செய்ய வேண்டும்...




மேலும் தொடர்ந்து படிக்கவும்...



மேலும் ஓளா ஆட்டோ புக் செய்வது எப்படி என்ற எங்களின் யூடியூப் சேனல் வீடியோ பார்கவும்‌‌ 👇👇👇👇👇




பின்னர் நீங்கள் எந்த இடத்தில் இருக்கிறீர்களோ அந்த இடத்திற்க்கு ஆட்டோ வருவதற்க்கு சரியான இடத்தில் நீங்கள் பச்சை நிற பிக் அப் பின்னை வைக்க வேண்டும்...


பின்னர் எங்கு செல்ல வேண்டுமோ அந்த இடத்தில் சிவப்பு நிற ட்ராப் ஆஃப் பின்னை சரியாக பொருத்த வேண்டும்...


முக்கிய குறிப்பு நீங்கள் தவறான முறையில் சரியான பின் லொக்கேஷன் கொடுக்கவில்லை என்றால் ஓட்டுனர் தவறான முகவரிக்கு சென்று விடுவார்...


பின்னர் ஆட்டோ என்பதை தேர்வு செய்தால் உங்களுக்கு கட்டண விவரம் தோன்றும் இது உறுதி என்று சொல்ல முடியாது கிலோமீட்டர் செல்லும் தொலைவை பொருத்து பயண முடிவில் கட்டண விவரம் வேறுபடும் என்பதை கவனத்தில் கொள்க வேண்டும்...


பின்னர் புக் ரைட் என்பதை க்ளிக் செய்து , ஒ.டி.பி நான்கு இலக்க எண்ணை ஒட்டுநருக்கு சொல்ல வேண்டும்...

பின்னர் உங்கள் பயணம் தொடங்கப்படும்...


ஒளா செயலியை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள கூகுள் ப்ளே ஸ்டோர் லிங்கை கிளிக் செய்யவும் 👇👇👇👇


https://bit.ly/3Y6Q1dI


கருத்துரையிடுக

Post a Comment (0)

புதியது பழையவை