நம் பயன்படுத்தப்படும் இமோஜிகளுக்கு என்ன அர்த்தம் என்று தெரியுமா உங்களுக்கு?
பொதுவாக நாம் லாட்ஸ் ஆப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற இன்னும் பல சமுக தளங்களில் இமோஜிகளை பயன்படுத்தி கொண்டு வருகிறோம்...
நம் ஒர் உரையாடல் அல்லது நம் கருத்தை தெரிவிக்கப்படும் போது அந்த நிலையில் நம் எவ்வாறு உணர்ச்சி வெளிப்படுத்துகிறோம், என்பதை வெளிப்படுத்தவே இமோஜிகளை பயன்படுத்துகிறோம்...
உதாரணமாக, கோபம், சிரிப்பு, அழுகை, சோகம் இது போன்ற இமோஜிகள் நமக்கு என்ன உணர்ச்சி வெளிப்படுத்துகிறது, என்பது சுலபமாக அறிந்து கொள்ள முடியும்...
இந்த இமோஜிகள் சில நூற்றுக்கணக்கில் உள்ளன...
இருந்த போதிலும் நமக்கு இன்னும் பல இமோஜிகள் என்ன பொருள் என்று அறியாத நிலையில் இருக்கிறோம்...
எனவே இந்த இமோஜிகளில் பலருக்கும் தெரியாத பொருள் கொண்ட உணர்ச்சிகளை இங்கு நாம் காணலாம்...
🤓🤓🤓🤓🤓🤓🤓🤓🤓🤓🤓🤓🤓🤓🤓🤓🤓
- கண்ணாடி போட்ட சிரிப்பு
ஆனால் பார்பதற்கு அப்பாவி போல் இருந்தாலும் இவர்கள் மிகவும் அதிபுத்திசாலி என்பதை நினைவில் கொள்ளவும்...
உங்களிடம் நகைச்சுவை நாயகனாக இருந்தாலும், அவர்களுக்கு தேவையான காரியங்கள் உங்களிடம் இருந்து சுலபமாக பெற்றுக்கொள்ளும் அதிபுத்திசாலி தனம் காணப்படும்...
🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩
2. கண்களில் நட்சத்திரமும் வாயில் மகிழ்ச்சியான சிரிப்பும்
இந்த 🤩 இமோஜின் வெளிப்பாடு என்னவென்றால் நீங்கள் நினைத்த ஒன்றை மாற்றவர் கூறுவது,
உதாரணமாக,
நீங்கள் ஒரு பெண்ணை ஒருதலை ராகம் போல் ஒரு தலை காதல் செய்கிறீர்கள்,
நீங்கள் உங்கள் ஆசை காதலிக்கு ஏதோ ஒன்று சொல்ல முயற்சி செய்கிறீர்கள்,
இப்போது உங்கள் ஆசை காதலி நீங்கள் நினைத்த ஒன்றை அவர் சொல்லிவிட்டார் எனில் நீங்கள் சும்மாவா இருப்பீர்கள் 😁...
உடனே பூமியில் கால் இல்லாமல் வான்மேகங்களிடம் புகுந்து வான் நட்சத்திரங்களிடம் பஞ்சம் புகுந்து, இந்த வான் உலகையாளும் வானரசனாக வாழ்ந்து விடுவீர்கள் அல்லவா😀...
ஆக, இந்த நிலையில் நீங்கள் உணர்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக 🤩 இந்த கண்களில் நட்சத்திரமும் வாயில் மகிழ்ச்சியான சிரிப்பும் சேர்ந்த இமோஜிகள் பயன்படுத்துகிறோம்...
😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌
3. கண்கள் மூடிய நிலையில் தரை பார்க்கும் இமோஜி
இந்த 😌 இமோஜியின் வெளிப்பாடு என்னவென்றால் நீங்கள் எந்த கவலையும் இன்றி ஒர் மன அமைதி பெற்ற தருணம்...
உதாரணமாக,
நீங்கள் உங்கள் பெண் பிள்ளை வயது வந்த நேரத்தில் குடும்ப இல்லற வாழ்வில் சேர்க்க நினைத்து, இப்போது உங்கள் பெண் பிள்ளைக்கு திருமணம் நடைபெற்றது...
இந்த நிலையில் உங்களுக்கு மன நிறைவு பெற்று மன நிம்மதி பெறும் நிலை வைத்துக்கொள்ளலாம்...
இப்ப கூட பாருங்க, உங்களுக்கு நான் இந்த இமோஜி பற்றி சொல்லனும் நினைச்சேன், இப்போது நான் உங்களிடம் சொல்லிவிட்டேன்...
எனக்கு இப்போது எந்த கவலை இல்லாமல் மன நிறைவு பெற்று 😌 நிம்மதியாக இருக்கேன்...
🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
3. முகத்தில் காதல் வடிவம் கொண்ட சந்தோசம்
இந்த இமோஜி 🥰 பார்பதற்கு முகத்தில் மகிழ்ச்சி பொங்க அங்காங்கே காதல் சின்னம் முளைத்த தோற்றம் கொண்டதாக இருக்கும்...
இதற்கு பொருள் என்னவென்றால்,
உதாரணமாக,
இப்போது நீங்கள் காதல் வலையில் கவர்ந்து உங்கள் காதல் நல்ல முறையில் சென்று கொண்டு இருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்....
இப்போது உங்கள் காதலிக்கு சில ஊடல் கலந்த உணர்ச்சிகளை உங்கள் இதயத்தின் படுக்கையறையில் இருந்து வெளிப்படுத்த நினைக்கும் போது பயன்படுத்தப்படும் இமோஜி ஆகும்...
புரியவில்லையா???
கல்யாணம் ஆகிவிட்டதா ?
இல்லை யா? ம்ம்ம் எப்படி ஆகும்...
சரி தெளிவா சொல்றேன்...
அதாவது நீங்கள் உங்கள் காதலியோ அல்லது திருமணம் செய்யப்பட்ட மனைவிக்கு, நீங்கள் முத்தம் கேட்க நினைப்பது போதுமா😀 சரி...
கனவு உலகத்தை விட்டு படிக்க வாருங்கள்...
🧐🧐🧐🧐🧐🧐🧐🧐🧐🧐🧐🧐🧐🧐🧐🧐🧐
4. ஒர் தொலைநோக்கி மூலம் தொலைநோக்கப் பார்வை கொண்ட இமோஜி
இந்த இமோஜி 🧐 பொருள் என்னவென்றால்,
நீங்கள் ஒரு நண்பரிடம் பேசும் போது அவர் பல கம்பி கட்ற கதை எல்லாம் சொல்லுகிறார்,
அதாவது உங்கள் நண்பர் உங்களிடம் பேசும் போது நம்ப முடியாத நிகழ்வை உங்களை நம்ப வைக்க பேசுகிறார்...
இப்போது நீங்கள் அவர் சொல்லுவது நம்பாமல் அவரை 🧐 பார்க்கிறீர்கள்...
முக்கியமாக நீங்கள் ஏமாற்றம் அடைய அவரிடம் தயாராக இல்லை என்பதையும் வெளிப்படுத்தப்படும் உணர்ச்சியாகும்...
🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄
5. கண்களை மேல் நோக்கி பார்க்கும் பார்வை
இந்த இமோஜி 🙄 பொருள் என்னவென்றால்,
உங்களிடம் ஒருவர் பேசும் போது மிகவும் சலிப்புடன் கூடிய உணர்ச்சி ஏற்படுவது,
அவர் உங்களிடம் பேசும் போது உங்களுக்கு வெறுப்பை உண்டாக்கும் நிலையில் பேசுகிறார் என்றால் நீங்கள் 🙄 இம்மாதிரியான இமோஜிகளை பயன்படுத்தி அனுப்பலாம்...
பாவம் உங்களை எப்படி எல்லாம் வெறுப்பு வர வைக்குறாங்க பாருங்கள் 😁😁😁....
சரி இன்னும் பல இமோஜிகளின் அர்த்தங்கள் அறிந்து கொள்ள எங்களின் யூடியூப் சேனல் வீடியோ பார்கவும்....👇👇👇👇👇👇👇👇👇👇👇
கருத்துரையிடுக