Youtube Copyright என்றால் என்ன?

யூடியூப் வீடியோ மூலம் வரும் Copyright Claim, Copy Right Strike பற்றி பலருக்கும் சரியான புரிதல் இல்லாமல் இருக்கிறார்கள்...







இந்த கட்டுரையில் நீங்கள் தெளிவாக புரிந்து கொள்ள பதிவு செய்யப்படுகிறது...

முதலில் நீங்கள் காப்புரிமை பற்றி தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்...

காப்புரிமை என்பது ஒருவரின் உழைப்பால் உண்டாக்கப்பட்ட உழைப்பானது, அது அவருக்கு மட்டுமே சொந்தம் என்ற அங்கீகாரம் அளிக்கப்படுவதாகும்...

நீங்கள் ஒரு உள்ளடக்கம் உங்கள் சொந்த திறமையில் உருவாக்கப்பட்டது...
இதை ஒருவர் உங்கள் அனுமதி இல்லாமல் பயன்படுத்தினால் அது சட்டத்திற்கு முரணாக செயல்படுவதாகவும்...

இதன் காரணமாக நீங்கள் வேறு ஒருவர் உழைப்பால் உருவாக்கப்பட்டதை நீங்கள் பயன்படுத்தினால், உங்கள் மீது அந்த நபர் சட்ட வழக்கு தொடரவும் அதிகாரம் உண்டு என்பதை நினைவில் கொள்ளுங்கள்...

இந்த காப்புரிமை என்பது உங்களின் உழைப்பு உங்களுக்கு மட்டுமே என்பதில் மிகவும் முக்கியமானதாக பின்பற்றப்பட்டு வருகிறது...

பொதுவாக யூடியூபில் காப்புரிமை தொடர்பான சிக்கல்கள்  பெரும்பாலும் வீடியோ மற்றும் ஒலி ஆடியோ விற்க்கு கிடைக்கும்...

ஆனால் சில சமயங்களில் புகைப்படங்கள் தொடர்பாகவும் வரக்கூடும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்...

Copy Right Claim :

காபி ரைட் க்ளைம் என்பது நீங்கள் ஒருவரின் உழைப்பால் உண்டாக்கப்பட்ட வீடியோவை அவரின் அனுமதி இல்லாமல் உங்கள் சொந்த பயன்பாட்டிற்கு பணம் சம்பாதிக்க பயன்படுத்தி கொள்வதற்கு கொடுக்கப்படும் ஒர் சட்ட ரீதியான சிக்கல் ஆகும்...

இதற்கு பொருள் என்னவென்றால் நீங்கள் அவரின் அனுமதி இல்லாமல் உங்கள் சொந்த தேவைக்கு அந்த வீடியோ அல்லது ஒலிப்பதிவு மற்றும் புகைப்படங்கள் இவற்றில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி கொண்டீர்கள்....

இந்த நிலையில் அவர் உங்களிடம் உள்ள அந்த உள்ளடக்கத்திற்கு காப்புரிமை க்ளைம் கொடுப்பார்...

இதன் விளைவாக நீங்கள் அந்த உள்ளடக்கத்தை பயன்படுத்திக் கொண்டாலும், 
அந்த உள்ளடக்கத்திற்கு வரும் வரும் வருவாய் மட்டும் அந்த உள்ளடக்கத்திற்கு உரிமை பெற்றவருக்கு சென்று விடும் என்பதில் நீங்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்....

இதனால் அந்த ஒரு உள்ளடக்கத்திற்கு வருவாய் மட்டும் உங்கள் கணக்கில் வந்து சேராது...

ஆக நீங்கள் யூடியூபில் உள்ள இம்மாதிரி சட்ட திட்டங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியதாகும்...

காப்புரிமை சம்மந்தப்பட்ட விவகாரத்தில் யூடியூப் நிறுவனம் மிகவும் கண்டிப்புடன் இருக்கும் என்பதில் ஆச்சரியம் இல்லை...

இந்த காப்புரிமை க்ளைம் பெற்ற யூடியூப் சேனல்களுக்கு எந்த ஒரு ஆபத்தும் இல்லை, என்பதில் தெளிவடைய வேண்டும்...

ஆனால் காப்பிரைட் ஸ்ட்ரைக் என்பது சற்று ஆபத்தில் கொண்டு போய் முடியும் என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்....

Copyright Strike:

யூடியூப் சேனல் வீடியோ மூலம் காப்புரிமை க்ளைம் வந்தால் கூட சேனலிற்க்கு பிரச்சினை இல்லை...

ஆனால் காப்புரிமை ஸ்ட்ரைக் வந்தால் பிரச்சினை ஆரம்பம் தான்...

காப்பிரைட் ஸ்ட்ரைக் என்பது என்னவென்றால்,
நீங்கள் ஒருவரின் உழைப்பால் உண்டாக்கப்பட்ட வீடியோ, ஒலிப்பதிவு, புகைப்படங்கள் இவைகளை அவர்களின் உரிமம் பெறாமல் பயன்படுத்தி விட்டீர்கள்...

இந்த நிலையில் உங்கள் மீது காப்புரிமை மீறல் சம்பந்தமாக சட்ட ரீதியாக உங்கள் சேனல் முடக்கப்பட வேண்டி கடுமையான நடவடிக்கை எடுக்கும் நோக்கத்தில் கொடுக்கப்படுவதாகும்...

இதனால் உங்கள் சேனலை யூடியூப் நிறுவனமே தண்டிக்கும் நோக்கத்தில் உங்கள் சேனலை முடக்கம் செய்ய முழு அதிகாரம் உண்டு என்பதை நினைவில் கொள்ள வேண்டும்..‌..

பெரும்பாலான யூடியூப் சேனல்களுக்கு இந்த நிலை ஏற்படுவது இல்லை...
அப்படி ஒரு நபர் காப்புரிமை மீறும் பட்சத்தில் அவர்களுக்கு நம் முதலில் மேற்கூறிய காப்பிரைட் க்ளைம் மட்டுமே கொடுக்கப்படுகிறது...

ஒரு வேளை நீங்கள் ஒரு முறை காப்புரிமை ஸ்ட்ரைக் பெற்றுவிட்டால், நீங்கள் 90 நாட்களுக்கு அந்த வழக்கில் இருப்பீர்கள்...

பின்னர் அதை நீங்கள் நீக்கிவிட்டப் பின்னர் 90 நாட்கள் பிறகு காப்புரிமை ஸ்ட்ரைக் நீக்கப்பட்டு விடும்...


ஆனால் ஒரு முறை காப்புரிமை ஸ்ட்ரைக் பெற்று இருக்கும் போது,




 அந்த 90 நாட்கள் நடைமுறையில் இருக்கும் பட்சத்தில்



 மீண்டும் இரண்டாவது முறையாக வேறு ஒரு காப்பிரைட் ஸ்ட்ரைக் பெற்று 2 விதிமுறைகள் என தொடர்ந்து மூன்று காப்புரிமை ஸ்ட்ரைக் 90 நாட்கள் பெற்று விட்டால் ,



அது மட்டுமல்லாமல் உங்கள் சேனலில் எந்த ஒரு வீடியோ பதிவும் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டலாம்....

உங்கள் சேனல் யூடியூப் நிறுவனத்தால் முடக்கப்படும் என்ற அபாயத்திற்க்கு சந்தேகமில்லை...

மேலும் காப்புரிமை பற்றி தெளிவாக புரிந்து கொள்ள இந்த யூடியூப் வீடியோவை பார்க்கவும் 👇👇👇👇👇👇



எனவே நீங்கள் இனி சொந்த உழைப்பால் உருவாக்கப்பட்ட உள்ளடக்கத்தை மட்டுமே பதிவு செய்து வாருங்கள்...

கருத்துரையிடுக

Post a Comment (0)

புதியது பழையவை