Blogger பற்றி அடிப்படை விளக்கம்

 



ப்ளாக்கர் என்பது என்ன?

ப்ளாக்கர் என்பது ஒரு வலைத்தளம் என்று கூறலாம்...

இது கூகிள் இன் கீழ் இயங்கிவரும் வலைதளப்பக்கம் ஆகும்...

நீங்கள் ஒரு எழுதும் திறமையாளராக இருந்தால் கண்டிப்பாக இது உங்களுக்கு தான்...

காரணம் நீங்கள் ப்ளாக்கர் மூலம் வலைதளம் உருவாக்கி , உங்கள் சொந்த திறமையில் பலதரப்பட்ட உள்ளடக்கங்களில் கட்டுரை எழுதி வெளியிடலாம்...

அது மட்டுமல்லாமல், இதன் மூலம் உங்களுக்கு வருமானம் கிடைக்கும்...

இந்த வருமானம் யூடியூப் சேனல் மூலம் கிடைக்கும் வருமானம் நிகர் என்பதும் அதை விட அதிக வருமானம் ஈட்டும் வகையில் இருக்கும்...




எப்படி பணம் கிடைக்கும் யார் கொடுப்பது?  

அதாவது, இந்த ப்ளாக்கர் மூலம் நீங்கள் பணம் பெறும் வழிகள் பல விளம்பரதாரர்கள் இருக்கிறார்கள்...

இவர்களில் மூலம் பணம் சம்பாதிக்க முடியும்...

இதில் மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்த பிரபலமான கூகுள் நிறுவனத்தின் ஒரு சேவையான கூகுள் ஆட்சென்ஸ் மூலம் இன்றும் பலர் இணைந்து பணம் சம்பாதித்துக் கொண்டு இருக்கிறீர்கள்...





சரி விளம்பரங்கள் எப்படி வரும்?

அதாவது இப்போது நீங்கள் ஏதேனும் ஒரு விடையை கண்டுபிடிக்க கூகுள் இல் தேடும் போது பொதுவாக சில கட்டுரைகள் தோன்றும்...

நீங்கள் கட்டுரை படிக்கும் போது சில இடங்களில் பல விளம்பரதாரர்கள் தோன்றுவதை பார்த்து இருப்பீர்கள்...

ஆக இதே போல் நீங்கள் ப்ளாக்கர் இல் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி, உங்கள் கட்டுரைகள் மற்ற பயனர்கள் உங்கள் தளத்தில் வந்து பார்க்கும் போது விளம்பரங்கள் தோன்றும் இதன் மூலம் உங்களுக்கு வருமானம் கிடைக்கும்...

மேற்கூறிய கூகுள் ஆட்சென்ஸ் இந்த விளம்பரங்களை கொடுக்கும் சேவையை பெருவாரியான கிரியேட்டர்களுக்கு வழங்கி வருகிறது...

இந்த விளம்பரங்கள் என்பது சில வகைகள் உள்ளன...

உதாரணமாக பேனர் விளம்பரங்கள்

இதை பற்றி நீங்கள் இனி வரும் கட்டுரைகளில் காண்பீர்கள்...

ப்ளாக்கரில் உள்ள சிறப்பு என்ன?

பொதுவாக வலைதளங்களில் இருந்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்றால் நீங்கள் பணம் கட்டி டொமைன் என்று சொல்லப்படும் செர்வரை வாங்க வேண்டும்...

உதாரணமாக,

(.காம்),  (.இன்) இது போன்ற டொமைன் வாங்க வேண்டும்...

இந்த டொமைன் நீங்கள் குறைந்தபட்சம் ஒரு ஆண்டுக்கு ரூபாய்: 1500 செலவழிக்க வேண்டும்...

பின்னர் வருடந்தோறும் இதுபோல் பணம் கொடுத்து டொமைன் தக்க வைத்துக் கொள்ள வேண்டும்...

ஆனால், இது போன்ற தொழில்நுட்பம் ப்ளாக்கரில் அவசியம் இல்லை,

 உங்களுக்கு கூகுள் உடன் இணைந்து ப்ளாக்கர் இலவசமாக ப்ளாக்கர் டொமைன் வழங்குகிறது...

உங்களுக்கு பணம் கட்டி டொமைன் வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் நீங்கள் வைத்துக்கொள்ளாலம்...

எந்த மாதிரியான உள்ளடக்கத்தில் நம் கட்டுரை எழுதலாம்?

நீங்கள் ப்ளாக்கரில் முதலில் எந்த மாதிரியான உள்ளடக்கத்தில் பதிவு வெளியிட போகிறீர்கள் என்று உறுதி படுத்திக்கொள்ள வேண்டும்...

உதாரணமாக,

நீங்கள் ஒரு கதை எழுதி முழுவதும் கதைக்களங்களை பதிவு செய்து வரலாம்...

உங்களுக்கு சமையல் கலை பற்றி கைவசம் வைத்து இருந்தால் சமையல் குறிப்புகள் பதிவு செய்யலாம்...

இது போல் விளையாட்டு, செய்திகள், அரசியல், போழுபோக்கு, சினிமா, தொழில் நுட்பம்,கல்வி, தொழில்,மருத்துவம் போன்ற பல தரப்பட்ட தலைப்புகளில் பதிவு செய்யலாம்...

இந்த கட்டுரையில் நீங்கள் ப்ளாக்கரைப் பற்றி அடிப்படை தகவல் அறிந்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்...

இனி வரும் போஸ்ட்களில் ப்ளாக்கர் பற்றி பல தகவல்கள் நீங்கள் அறிந்து கொள்ளலாம்...

கருத்துரையிடுக

Post a Comment (0)

புதியது பழையவை